பிரித்தானியா மகாராணிக்கு கொரோனா தொற்று உறுதி
பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2019ம் ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் பல உருமாற்றங்களை அடைந்து இன்று வரை உலக நாடுகளில் பரவி வருகிறது.
பிரித்தானியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், தடுப்பூசி போடும் பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் மகாராணியாரின் மகன் இளவரசர் சார்லசுக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டது.
தற்போது மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு தொற்று உறுதியாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லேசான சளி அறிகுறிகளுடன் தொற்று உறுதியாகியிருப்பதாகவும், மிக அவரசமான பணிகளில் மட்டும் மகாராணி கவனம் செலுத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவ ஆலோசனைகளின் படி முறையான நடைமுறைகளை மகாராணி பின்பற்றுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தவணை கொரோனா தடுப்பூசிகளும் மகாராணி எலிசபெத் செலுத்திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.