இளவரசர் வில்லியம் ஹரியை ஒன்றிணைத்த மகாராணியார்: இறுதிச்சடங்கில் செய்யப்பட்டுள்ள மாற்றம்...
பிரித்தானிய மகாராணியாரின் கணவருடைய இறுதிச்சடங்கில், சகோதரர்கள் வில்லியம் மற்றும் ஹரி அருகருகே நடந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.
மகாராணியாரின் இறுதிச்சடங்கில் சகோதரர்கள் அருகருகே நடந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானிய இளவரசர் ஹரி, அமெரிக்கப் பெண்ணான மேகனை திருமணம் செய்ததைத் தொடர்ந்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள், சகோதரர்கள் வில்லியம் ஹரிக்குள் மட்டுமல்ல, ஒரு அண்ணியாக இல்லாமல் ஒரு சகோதரியைப் போல ஹரியுடன் பழகி வந்த கேட்டுடனான உறவிலும் விரிசலை ஏற்படுத்தின.
எங்கு சென்றாலும் இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட், அவரது மைத்துனர் ஹரி என மூவரும் இணைந்தே செல்வதைக் கண்டு புழகாங்கிதம் அடையும் ராஜ குடும்ப ரசிகர்கள், ஹரிக்கு திருமணமாகி ராஜகுடும்பத்துக்குள் மேகன் வந்தபோது, அவர்கள் நால்வரும் இணைந்து செல்வதைக் காணும் பாக்கியம் தங்களுக்குக் கிடைக்குமென்றே காத்திருந்தார்கள்.
Credit: Getty
ஆனால், ராஜகுடும்ப மரபுகள் தெரியாத மேகன், அந்த கூட்டைக் கலைத்து, ஹரியை ராஜகுடும்பத்தை விட்டே பிரித்து, தன்னுடன் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.
இளவரசர் பிலிப் இயற்கை எய்தியபோது, சகோதரர்கள் இருவரின் குடும்பமும் ஒன்றிணையும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இளவரசரின் இறுதிச்சடங்கின்போது அவரது உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியின் பின்னால் சகோதரர்கள் நடந்துசென்றபோதுகூட, அவர்கள் ஒன்றிணைய அனுமதிக்கப்படவில்லை.
Credit: PA
காரணம், அவர்களுடைய உறவினரான இளவரசர் பீற்றர் பிலிப்ஸ் என்பவர் வில்லியம் ஹரிக்கு நடுவே நடக்க, சகோதரர்கள் தங்கள் தாத்தாவின் இறுதிச்சடங்கில் இணைந்து நடக்கக்கூட முடியவில்லை.
ஆனால், பேரன்களின் அன்புப் பாட்டியாரான மகாராணியார் எலிசபெத்தின் மரணம் சகோதரர்களை ஒன்றிணைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்முறை, அதாவது பாட்டியாரின் இறுதிச்சடங்கின்போது, சகோதரர்கள் வில்லியம் மற்றும் ஹரி அருகருகே நடந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சகோதரர்களுக்கிடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்படலாம் என கருதப்படுவதால் ராஜகுடும்ப ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளார்கள்.
Credit: Rex