பொது இடத்தில் வைத்து லிப்ஸ்டிக் போட்டுக்கொள்ளும் மகாராணியார்: பின்னணியிலுள்ள இரகசியம்
சில நேரங்களில் மகாராணியார் பொது இடங்களில் வைத்து லிப்ஸ்டிக் போடும் புகைப்படங்களைக் காணலாம்.
அதன் பின்னணியில் ஒரு இரகசியம் உள்ளதாம்.
பிரித்தானிய மகாராணியார், பொது இடங்களில் வைத்து லிப்ஸ்டிக் போடும் புகைப்படங்கள் பலவற்றைக் காணமுடியும்.
உண்மையில், அதன் பின்னால் ஒரு இரகசியம் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?
மகாராணியாரிடம் உதவியாளராக பணியாற்றிய Ian Scott Hunter என்பவர், தற்போது அந்த இரகசியத்தை வெளியிட்டுள்ளார்.
Credit: Reportage - Getty
அதாவது, மகாராணியார் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும்போது, தனது உதவியாளர்களை சத்தமாக அழைத்து அவர்கள் செய்யவேண்டியதைக் கூறாமல், இரகசிய சமிக்ஞைகள், அதாவது சிக்னல்கள் மூலம் தகவல் பரிமாற்றம் செய்வாராம்.
பொதுவாக பெண்கள் பொது இடங்களில் மேக் அப் போட்டுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறும் Hunter, ஆனால், மகாராணியார் எப்போதும் தன் பக்கத்தில் ஒரு கைப்பையை வைத்திருப்பார். அதிலிருந்து லிப்ஸ்டிக்கை எடுத்து உதடுகளில் பூசிக்கொள்வார். அதற்கு கண்ணாடி எல்லாம் பயன்படுத்தமாட்டார் என்கிறார்.
Credit: Getty - Contributor
உண்மையில் அது எதற்கு என்றால், தன் உதவியாளர்களான பெண்களுக்கு, தான் புறப்படத் தயாராக இருப்பதைத் தெரிவிக்கும் சிக்னலாம் அது!
உடனடியாக அந்த பெண்கள், தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு புறப்படத் தயாராகிவிடுவார்களாம். மகாராணியார் எழுந்ததும், அவர்களும் உடனே எழுந்து அவரைப் பின்தொடர்வார்களாம்.
அத்துடன், தன் கைப்பை மூலமும் தன் உதவியாளர்களுக்கு சிக்னல் கொடுப்பாராம் மகாராணியார். வழக்கமாக தனது இடதுபுறம் இருக்கும் தன் கைப்பையை, அவர் வலதுபுறம் எடுத்துவைத்தால், தான் பேசிக்கொண்டிருக்கும் நபருடன் பேச்சை முடித்துக்கொள்ளப்போவதாகவும், அதே பையை மேசை மீது வைத்தால், ஐந்து நிமிடத்தில் தான் புறப்படப்போவதாக தன் உதவியாளர்களுக்கு தெரிவிப்பதாகவும் அர்த்தமாம்!
Credit: Getty - Contributor