கால சர்ப்ப தோஷம் ஏற்பட காரணம் என்ன? இதற்கு என்ன பரிகாரங்கள் செய்யலாம்?
முன் ஜென்மத்தில் வாழ்ந்த போது பாம்பிற்கோ அல்லது பிற விலங்கினங்களுக்கோ நீங்கள் கேடு விளைவித்திருந்தால் உங்களுக்கோ அல்லது உங்களது சந்ததியினருக்கோ நாக சர்ப்ப தோஷம் ஏற்படுகின்றதாக கருதப்படுகின்றது.
இத்தோஷம் ஏற்பட காரணம் என்ன? இதற்கு என்ன பரிகாரம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
காரணம் என்ன?
கால சர்ப்ப தோஷம் என்பது ராகு, கேது ஆகிய இருபாம்புக்களுக்கிடையே மற்ற ஏழு கிரகங்களும் அடைபட்டு இருப்பதாகும்.
ராகு, கேது இருவரும் விஷம் உள்ள பாம்புகள். இவர்களுக்கு இடையே சிக்கி முன்னும் பின்னும் இவர்களின் விஷத்தால் தாக்கப்படுவதால் கிரகங்கள் செயல் இழக்கின்றன என்பது கருத்து.
ராகுவிற்கு பாம்பின் உடல் குணத்தால் வாலில் விஷம், கேதுவிற்கு பாம்பின் தலையானதால் தலையில் விஷம். இந்த அடிப்படையில் கால சர்ப்ப தோஷம் அமைகிறது.
சர்ப்ப தோஷம் என்பது திருமணத்தில் தடைகள், திருமணம் அமைவதில் தடைகள், திருமண வாழ்க்கை ஆகியவற்றில் தடைகள் ஏற்படும்.
பரிகாரங்கள்
- ராகுகாலங்களில் அம்பாள் சன்னதியில் எல்லாநாளும் வரும் ராகுகாலத்தில் எலுமிச்சையில் தாமரைநுாலில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் தோஷம் விலகும்.
- கால பைரவரை வழிபட்டால் இந்த கால சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரம் கிடைக்கும்.
- கால சர்ப்ப தோஷத்திற்கு குலதெய்வ வழிபாடு, பிறகு மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது, ஆதரவற்றவர்களுக்கு உதவுவது என்றெல்லாம் செய்தாலே கால சர்ப்ப தோஷத்திற்கு பலன் கிடைக்கும்.
- சூரியகிரகணமும், சந்திர கிரகணமும் வரும் நாட்களில் திருக்காளஹஸ்தி கோவிலில் உள்ள சிவபெருமானை வழிபட்டால் நன்மை கிடைக்கும்.
- ஏழை எளியோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்தால் தோஷத்தினால் ஏற்படும் தீமைகளில் இருந்து விடுபடலாம்.