இங்கிலாந்துடனான மோசமான தோல்விக்கு இது தான் காரணம்! ஒப்புக் கொண்ட கோஹ்லி
இந்திய அணியின் தலைவரான கோஹ்லி, இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டி தோல்விக்கான காரணம் என்ன என்பது குறித்து கூறியுள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, மோசமான தோல்வியை சந்தித்தால், அடுத்த நிமிடமே கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் தலைவர் கோஹ்லி இந்த தோல்வி குறித்து கூறுகையில், சில ஷாட்களை நாங்கள் சரியாக ஆடவில்லை.
இது போன்ற மைதானத்தில் நாங்கள் என்ன செய்வது என்றே தெரியவில்லை.
எங்களைப் பொறுத்தவரை இன்றைய நாள் சரியாக அமையவில்லை. எங்களின் தவறுகளை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.
அதிகமான தெளிவான மனதுடன், தீவிரமான எண்ணத்துடன், திட்டங்களுடன் அடுத்த போட்டியில் களமிறங்குவோம்.
இந்த மைதானம் எங்களுக்கு சரியாக அமையவில்லை என்றாலும், ஸ்ரேயாஸ் அய்யர் எப்படி ஆடினார் என்பது எங்களுக்கு சிறந்த உதாரணம்.
சில புதிய விஷயங்களை இந்த போட்டியில் செய்ய முயன்றோம். ஆனால், மைதானத்தின் சூழலை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும்.
ஆடுகளம் நீங்கள் நினைத்த ஷாட்களை ஆடுவதற்கு ஏற்றதாக இருந்தால், திட்டமிட்டதை நிறைவேற்றலாம்.
ஆனால், எங்களுக்குச் சூழலை உணர்ந்து அதற்கு ஏற்ற பேட் செய்யவே எங்களுக்குப் போதுமான நேரம் இல்லை, அதிக ஓட்டங்கள் குவிக்க முடியவில்லை.
இதுவே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என்று கூறியுள்ளார்.
