ஒன்ராறியோவிலுள்ள ஆசிய உணவகத்தில் சாப்பிட்ட பலர் மருத்துவமனையில் அனுமதி: உணவில் விஷம்?
ஒன்ராறியோவிலுள்ள ஆசிய உணவகத்தில் சாப்பிட்டவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உணவில் விஷம் கலந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஒன்ராறியோவிலுள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட்ட பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உணவில் விஷம் கலந்திருக்கலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒன்ராறியோவின் Markham பகுதியில் அமைந்துள்ள Delight Restaurant & BBQ என்ற உணவகத்தில் சாப்பிட்ட பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
அந்த உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கட்கிழமை சாப்பிட்ட யாராவது உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக யார்க் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சம்பந்தப்பட்ட உணவகம் மூடப்பட்டுள்ளது.
Hearing reports of a mass poisoning event related to a Markham restaurant, possibly involving aconite
— David Juurlink (@DavidJuurlink) August 29, 2022
Aconitine is a highly toxic alkaloid derived from the genus Aconitum (monkshood, wolfsbane and others)
Quick thread:
/1