பாகிஸ்தானில் செல்வத்தை குவிக்கும் பணக்கார இந்து பெண்.., நிதி நெருக்கடியிலும் இத்தனை கோடியா?
பாகிஸ்தான் நாடு நிதி நெருக்கடியில் தத்தளித்து வரும் நிலையில் இந்து பெண் ஒருவர் கோடிகளில் புரண்டு வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் நாட்டு மக்கள் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். சிலர் இந்த நாட்டை 'தோல்வியடைந்த அரசு' என்று கூறி வருகின்றனர். இந்த நிலைக்கு காரணம் அரசியல் வர்க்கம் தான் என்றும் சிலர் கூறுகின்றனர்.
அங்கு அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் பொருட்கள் முதல் எரி பொருள்கள் வரை விலைவாசி உயர்ந்துள்ளது. இதனால் அங்குள்ள அனைத்து மக்களும் பாதித்துள்ளனரா என்று கேட்டால், இல்லை. ஆக்கப்பூர்வமான வழியில் சொத்துக்களை சேர்த்தவர்கள் பாதிக்கப்படவில்லை.
அந்தவகையில் பாகிஸ்தான் நாட்டில் உள்ள பணக்கார இந்து பெண்ணான சங்கீதா (Sangeeta) பல பெண்களுக்கு முன் உதாரணமாக இருந்து வருகிறார்.
இந்து பெண்
1947 -ம் ஆண்டு ஜூன் 14 -ம் தேதி இந்தியாவில் பிறந்த Sangeeta நடிகையாக இருப்பது மட்டுமல்லாமல் இயக்குநராகவும் இருந்துள்ளார். இவர் 45 ஆண்டுகளாக பாகிஸ்தான் சினிமாவில் இருந்துள்ளார். கோஹினூர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.
தனது அசாத்திய திறமை மற்றும் நடிப்பின் மூலம் பாகிஸ்தான் திரைத்துறையில் தவிர்க்கமுடியாத ஒருவராக மாறியுள்ளார். இவர் ஆண்டு ஒன்றுக்கு ரூ.39 கோடி சம்பாதித்து வருகிறார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் நாடு நிதி நெருக்கடியில் தத்தளித்து வரும் நிலையில் அந்த நாட்டை சேர்ந்த இந்து பெண்ணான Sangeeta செல்வத்தை குவித்து பணக்கார இந்து பெண்ணாக மாறியுள்ளார். இதற்கு காரணம் அவர் திரைத்துறை மீது வைத்திருந்த ஆர்வம் மற்றும் கடின உழைப்பு மட்டும் தான் என்று கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |