ATM இயந்திரத்துக்கு வெடிவைத்த கொள்ளையர்கள்: எதிர்பாராமல் நிகழ்ந்த விடயம்
சுவிஸ் மாகாணமொன்றில் கொள்ளையடிப்பதற்காக ATM இயந்திரத்துக்கு வெடிவைத்துள்ளார்கள் கொள்ளையர்கள் சிலர்.
ஆனால், அந்த வெடிப்பொருட்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருந்ததால், அந்தக் கட்டிடம் முழுவதுமே பயங்கரமாக சேதமடைந்துவிட்டது.
ATM இயந்திரத்துக்கு வெடிவைத்த கொள்ளையர்கள்
சுவிஸ் மாகாணமான Vaudஇல் அமைந்துள்ள ஒரு ATM இயந்திரத்தை வெடிவைத்து தகர்த்து கொள்ளையடிப்பதற்காக அதற்கு வெடிவைத்துள்ளார்கள் கொள்ளையர்கள் சிலர்.
ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த வெடி வெடித்ததில் அந்த முழு கட்டிடமும் பயங்கரமாக சேதமடைந்துவிட்டது.
Keystone-SDA / Michael Buholzer
இருந்தாலும், அந்தக் கொள்ளையர்கள் கொள்ளையடித்த பணத்துடன் எங்கோ ஓடிவிட்டார்கள். இதுவரை அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
எவ்வளவு பணம் கொள்ளை போனது என்பதும் இதுவரை தெரியவரவில்லை.
தொடரும் ATM கொள்ளைகள்
விடயம் என்னவென்றால், கடந்த சில ஆண்டுகளாக இப்படி ATM இயந்திரங்களுக்கு வெடிவைத்து கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன.
2022இல் மட்டுமே, இதுபோல 52 கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இம்மாதம், அதாவது, ஜூலை 4ஆம் திகதி கூட Vaud மாகாணத்தில் இதேபோல ஒரு கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |