31 ஆண்டுகளுக்குமுன் பிரிந்த காதல் ஜோடி: திரைப்படம்போல் ஒரு சுவாரஸ்ய சம்பவம்

Germany
By Balamanuvelan Feb 22, 2023 07:00 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

31 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த ஒரு காதல் ஜோடி, வாழ்வின் பல கட்டங்களைக் கடந்தபின் மீண்டும் இணைந்ததைக் குறித்த ஒரு சுவாரஸ்ய செய்தி வெளியாகியுள்ளது.

கண்டதும் காதல்

இங்கிலாந்திலுள்ள Guisborough என்ற இடத்தைச் சேர்ந்த Kate Pymm (17), 1989ஆம் ஆண்டு, Devon நகருக்குச் சென்றிருந்தபோது, ஜேர்மனியைச் சேர்ந்த Guenther Baer (32)என்பவரை சந்தித்துள்ளார்.

Baer பார்ப்பதற்கு பிரபல இசைக்குழு ஒன்றைச் சேர்ந்த Magne Furuholmen என்பவரைப் போலவே இருந்ததால், Kateக்கு அவரைக் கண்டதும் ஈர்ப்பு உருவாகியுள்ளது.

31 ஆண்டுகளுக்குமுன் பிரிந்த காதல் ஜோடி: திரைப்படம்போல் ஒரு சுவாரஸ்ய சம்பவம் | The Romantic Couple Who Broke Up 31 Years Ago

image - FAMILY HANDOUT   

இருவரும் அறிமுகம் செய்துகொண்டு, முகவரிகளைப் பகிர்ந்துகொண்டு பின் பிரிந்துசென்றுள்ளார்கள். கடிதம் மூலம் காதல் வளர்ந்துள்ளது.

ஆனால், இரண்டு வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்ததால் சரியாக சந்திக்கவும் முடியாமல், தொலைபேசிக் கட்டணம் மிக அதிகமாக இருந்ததால் பேசவும் முடியாமல் காதல் ஜோடி தவித்த நிலையில், ஒரு கட்டத்தில் இந்தக் காதல் கைகூடாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் Kate.

1993க்குப் பிறகு கடிதப் போக்குவரத்தும் நின்றிருக்கிறது.

Kate வேறொருவரைத் திருமணம் செய்து தனியாக மேக் அப் தொழில் ஒன்றைத் துவங்கியுள்ளார். Baerக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் பிறந்துள்ளன. ஒரு கட்டத்தில் இரண்டு தம்பதியருமே விவாகரத்து செய்து பிரிந்துள்ளார்கள்.

திரைப்படம் போல் ஒரு காட்சி

2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கிறிஸ்துமஸ் அட்டைகளைத் தேடும்போது, தனக்கு Baer எழுதிய காதல் கடிதங்கள் Kate கையில் கிடைத்துள்ளன. இவ்வளவு காலம் பத்திரமாக வைத்திருந்த அந்தக் கடிதங்களைக் கண்டதும் உணர்ச்சிகள் மேலோங்க, Baerஇன் முகவரியைக் கஷ்டப்பட்டுத் தேடிக் கண்டுபிடித்து அவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் Kate.

அவருக்குத் தெரியாது, கடந்த எட்டு ஆண்டுகளாகவே Kateஇன் நினைவுகள் Baerஐ வாட்டிவைத்துக்கொண்டிருப்பது.

31 ஆண்டுகளுக்குமுன் பிரிந்த காதல் ஜோடி: திரைப்படம்போல் ஒரு சுவாரஸ்ய சம்பவம் | The Romantic Couple Who Broke Up 31 Years Ago

image - FAMILY HANDOUT

கடிதம் கையில் கிடைத்த அடுத்த நிமிடம், அதாவது, இரண்டே நாட்களுக்குப் பிறகு, Kateஐ தொலைபேசியில் அழைத்துள்ளார் Baer. பல நாட்கள் தொலைபேசி உரையாடல்களுக்குப் பிறகு, 2021ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் மீண்டும் ஜோடி சந்திக்க, பழைய நினைவுகள் பொங்கியெழ, இனியும் பிரிந்திருப்பதில் அர்த்தமில்லை என்று உணர்ந்த Baerம் Kateம், 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஜேர்மனியின் பவேரியாவில் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள்.

தற்போது, அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ஜேர்மனிக்கே சென்று Baerஉடன் புது வாழ்வைத் துவங்க புறப்பட்டுள்ளார் Kate.

31 ஆண்டுகள் பிரிவுக்குப் பிறகு இணைந்த Baer, Kate ஜோடியின் கதை, திரைப்படம் போல சுவாரஸ்யமாகத்தான் உள்ளது.  

31 ஆண்டுகளுக்குமுன் பிரிந்த காதல் ஜோடி: திரைப்படம்போல் ஒரு சுவாரஸ்ய சம்பவம் | The Romantic Couple Who Broke Up 31 Years Ago

image - FAMILY HANDOUT 

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Melbourne, Australia

14 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ontario, Canada

16 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, சிட்னி, Australia

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Bremen, Germany

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
மரண அறிவித்தல்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US