1 ரூபாயின் மதிப்பு இந்த நாட்டில் 500 ரூபாய்க்கு சமம்.., எந்த நாட்டில் தெரியுமா?
1 ரூபாயை நாம் இந்த நாட்டில் பயன்படுத்தினால் அது 500 ரூபாய்க்கு சமமாகும். அது எந்த நாடு என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
1 ரூபாயின் மதிப்பு
அமெரிக்க டொலருக்கு முன் இந்திய ரூபாயின் மதிப்பு குறைவாக உள்ளது. ஆனால், இந்திய ரூபாயின் மதிப்பு மிக அதிகமாக இருக்கும் நாடுகள் பல உள்ளன.
அந்தவகையில், இந்தியாவின் ஒரு ரூபாயை கொடுத்தால் இந்த நாட்டில் 500 ரூபாய் கிடைக்கும். இந்த நாட்டுடன் இந்தியாவானது பழங்காலத்தில் இருந்தே நல்ல உறவுடன் இருக்கிறது.
இது, உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இருந்தாலும் அமெரிக்க நாட்டின் பொருளாதார தடைகளால் நிலைமை மோசமடைந்துள்ளது.
பொருளாதாரத்தில் வலிமையாக இருக்கும் ஈரான் நாடானது உலக வல்லரசு நாடுகளுக்கு நெருக்கடியை கொடுக்கும் வகையில் இருந்தாலும், நாட்டின் நாணயத்தின் மதிப்பு மோசமாக உள்ளது. ஈரான் பணமானது ஆங்கிலத்தில் ஈரான் ரியால் (Iranian rial) என்று அழைக்கப்படுகிறது.
ஈரானிடம் இருந்து பல நாடுகள் அமெரிக்காவுக்கு பயந்து கச்சா எண்ணெயை வாங்கவில்லை. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் ஈரானின் பொருளாதாரம் சரிய ஆரம்பித்தது.
ஈரானில் ஒரு இந்திய ரூபாயானது 507.22 ஈரானிய ரியாலுக்கு சமம். ஒருவர் பத்தாயிரம் இந்திய ரூபாயுடன் ஈரானுக்கு சுற்றுலா சென்றால் சொகுசாக இருக்கலாம்.
இந்த நாடானது இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுடன் மட்டுமே வர்த்தகத்தை மேற்கொள்கிறது. அமெரிக்காவுடன் ஏற்பட்ட பகையால் இந்த நாட்டில் அமெரிக்க டொலர்களை வைத்திருப்பது மிகப்பெரிய குற்றம் ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |