நடிகர் ரஜினிகாந்த் இப்படி செய்வது ஏன் தெரியுமா? வெளியான காரணம்
நடிகர் ரஜினிகாந்த் எப்போதும் அவரது விரல்களை மடித்து வைத்திருப்பதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்
1975 ஆம் ஆண்டு வெளியான அப்பூர்வ ராகங்கள் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகியவர் நடிகர் ரஜினிகாந்த்.
ஆரம்பத்தில் வில்லனாகவும் சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே என்ற படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் சேர்ந்து நடித்தார்.
தொடர்ந்து சிறிய பாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த நடிகர் ரஜினிகாந்த், 1978 ஆம் ஆண்டு வெளியான பைரவி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார்.
இவருடைய ஒவ்வொரு செய்கையும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக ஈர்க்கப்பட்டு, இவர் சூப்பர் ஸ்டார் எனவும் அழைக்கப்பட்டார்.
இவ்வாறு அவர் பல படங்களில் நடித்து வருவது மட்டுமல்லாமல் தற்போதைய இளம் ரசிகர்கள் மத்தியிலும் ஒரு முக்கிய இடத்தில் உள்ளார்.
இந்நிலையில் இவர் அவருடைய கையின் கட்டை விரல் மற்றும் பெருவிரலை ஒன்றாகவே வைத்திருப்பார். அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
அப்படி செய்வது ஏன்?
நடிகர் ரஜினிகாந்த் எப்போதும் தன் கையின் கட்டை விரல் மற்றும் பெருவிரலை சேர்த்து முத்திரை ஒன்றை செய்துக்கொண்டே இருப்பார்.
இந்த செயலை பலரும் பல திரைப்படங்களில் பார்த்திருப்பார்கள். ஆனால் அது ஏன் என்று குறித்து யாரும் ஆராய்ந்து பார்த்திருக்க மாட்டீர்கள்.
எனவே இதற்கான பதிலை யோகா நிபுணர்கள் விரிவாக கூறியுள்ளனர். அதாவது ரஜினிகாந்த் பயன்படுத்தும் அந்த முத்திரையின் பெயர் சின் முத்ரா எனப்படும்.
இதை செய்வதன் மூலம் மூளை நரம்புகள் நன்றாக வேலை செய்யும். எனவே நினைவாற்றல் அதிகரித்து மன அழுத்தமும் குறையும்.
கோபம், தூக்கமின்மை, தலைவலி போன்ற பிரச்சினைகளும் போக்கும். இந்த சின் முத்திரையை செய்வதன் மூலம் கவனம் சிதறாமல் எப்போதும் ஒரே எண்ணத்தில் இருக்கலாம் என யோகா நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
எனவே தான் ரஜினிகாந்த் இதை தவறாமல் எப்போதும் செய்துக்கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |