பிரித்தானிய ரோந்து விமானத்தைப் பின்தொடர்ந்த ரஷ்ய போர் விமானங்கள்: திடீரென ஏவுகணை வீசியதால் ஏற்பட்ட அதிர்ச்சி...
சர்வதேச வான்வெளியில் ரோந்து சென்ற பிரித்தானிய விமானம் ஒன்றை ரஷ்யப் போர் விமானங்கள் பின்தொடர்ந்ததாக அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரித்தானிய பாதுகாப்புத்துறைச் செயலர்.
90 நிமிடங்களுக்கு இந்த பின்தொடர்தல் தொடர்ந்திருக்கிறது.
செப்டம்பர் 29ஆம் திகதி, பிரித்தானிய விமானம் ஒன்று தனது வழக்கப்படி கருங்கடல் மீது ரோந்து சென்றுகொண்டிருந்ததாம்.
அப்போது, இரண்டு ரஷ்ய போர் விமானங்கள் பிரித்தானிய விமானத்தைப் பின்தொடர்ந்துள்ளன.
அடுத்து நடந்தது, அதைவிட அதிர்ச்சியளிக்கும் விடயம். ஆம், திடீரென ரஷ்யப் போர் விமானம் ஒன்றிலிருந்து ஏவுகணை ஒன்று சீறிப்பாய்ந்திருக்கிறது. 90 நிமிடங்களுக்கு இந்த நாடகம் தொடர்ந்திருக்கிறது.
இந்த சம்பவம் கொடுத்த அதிர்ச்சியில், சில நாட்களுக்கு ரோந்து செல்வதையே பிரித்தானியா நிறுத்திவிட்டதாம். ஆனாலும், தற்போது பிரித்தானிய போர் விமானங்களுடன் இணைந்து மீண்டும் ரோந்து செல்வதை பிரித்தானியா துவங்கியுள்ளது.
தங்கள் போர் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏவுகணை ஏவப்பட்டதாக ரஷ்யா கூறியுள்ளது.
ஆனாலும், அது எவ்வளவு ஆபத்தான ஒரு விடயமாக முடிந்திருக்கக்கூடும் என்பதை நினைவூட்டும் ஒரு சம்பவமாக பிரித்தானியா எடுத்துக்கொண்டுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்புத்துறைச் செயலர் பென் வாலேஸ் தெரிவித்துள்ளார்.
Credit: RAF
Credit: Alamy