பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல்: மேக்ரான் கட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள அதிர்ச்சி
பிரான்சில் 20 ஆண்டுகளில் இரண்டாவது முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் நபர் என்ற பெருமையை பெற்ற இமானுவல் மேக்ரானுக்கு, மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்கள்.
ஆம், மேக்ரானின் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையை இழந்துள்ளது!
பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் முதல் கட்ட முடிவுகளின்படி, மேக்ரானின் கட்சி 577 இருக்கைகளில் 245 இருக்கைகளை மட்டுமே கைப்பற்றியுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேக்ரான் கட்சியைத் தொடர்ந்து Jean-Luc Melenchon என்பவரது கட்சி 131 இருக்கைகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளதால், அக்கட்சி எதிர்க்கட்சியாகியுள்ளது.
அறுதிப் பெரும்பான்மை பெற ஒரு கட்சி 289 இருக்கைகள் பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.