புயலால் சுவிஸ் கிராமமம் ஒன்றிற்கு ஏற்பட்டுள்ள நிலை... மக்கள் செய்யும் நெகிழவைக்கும் செயல்கள்
கடந்த வாரம் புரட்டி எடுத்த புயலால், சுவிஸ் கிராமம் ஒன்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Neuchatel மாகாணத்திலுள்ள Cressier கிராமம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் மக்களே ஒருவருக்கொருவர் உதவ முன்வந்துள்ளார்கள். பல வீடுகள் பெருவெள்ளத்தாலும் சகதியாலும் பாதிக்கப்பட்டு வாழத் தகாதவையாக ஆகிவிட்ட நிலையில், உள்ளூர் மக்களே களமிறங்கி வீடுகளை சுத்தம் செய்யவும், தோட்டங்களை துப்புரவாக்கவும் தொடங்கியுள்ளதுடன், தண்ணீர் வழங்கவும், துணி துவைத்துக்கொடுக்கவும் முன்வந்துள்ளார்கள்.
உள்ளூர் உணவகம் ஒன்று, பாதிக்கப்பட்டு சமைக்க முடியாத நிலைமையிலிருக்கும் சமையலறைகளைக் கொண்ட வீடுகளிலிருப்போருக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறது. உணவக உரிமையாளரான Leonardo Pereira, தனிப்பட்ட முறையில் தனக்கு செலவுதான் என்றாலும், தனக்கு மக்கள் பண உதவி செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளார். மக்களுக்கு விநியோகிப்பதற்காக, உள்ளூர் தபால் நிலையத்திற்கும் மக்கள் உணவு வழங்கி வருகிறார்கள்.
63 வயதான Huguette Giயின் வீடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், மக்கள் ஏராளம் பேர் தனக்கு உதவிவருவதாகக் கூறி, நன்றியுணர்வால் தனக்கு கண்ணீர் வருவதாக நெகிழ்கிறார்.