பிரித்தானியாவில் தங்கள் கடையை சூறையாட முயன்ற கொள்ளையனைத் தாக்கிய இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை
தங்கள் கடையை சூறையாட முயன்ற கொள்ளையனை கையும் களவுமாக பிடித்த இந்தியர்கள் இருவர் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் இங்கிலாந்தில் நிகழ்ந்துள்ளது.
போதைக்கு அடிமையானவரான Jason Urwin என்ற நபர், இங்கிலாந்திலுள்ள Dormanstown என்ற இடத்தில், Ravinder Bob Singh (40) மற்றும் Sukhwinder Singh (30) என்னும் இருவர் வைத்துள்ள கடைக்குள் நுழைந்து திருட முயன்றபோது, அவரைக் கையும் களவுமாக பிடித்திருக்கிறார்கள் Ravinderம் Sukhwinderம்.
கொள்ளையனைப் பிடித்து வைத்துவிட்டு அவர்கள் பொலிசாரை அழைக்க, பொலிசாரோ Ravinderம் Sukhwinderம் Jasonஐத் தாக்கியதாக அவர்களை கைவிலங்கிட்டு கைது செய்துள்ளார்கள்.
நாங்கள் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள், இதுவே எங்கள் ஊரில் இப்படி ஒரு திருடனைப் பிடித்திருந்தால், எங்களை ஹீரோவாக கொண்டாடியிருப்பார்கள். இங்கே, எங்களை கைவிலங்கிட்டு கைது செய்கிறார்கள் என்கிறார் Ravinder.
இத்தனைக்கும், Urwin, 25 ஆண்டுகளாக 143 குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அவர் மீது 43 குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
Urwinஐ விட்டுவிட்ட பொலிசார், கொள்ளையடிக்க முயன்ற அவரைப் பிடித்த Ravinderஐயும் Sukhwinderஐயும் கைது செய்துள்ளார்கள். Urwinக்கு 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், அவர் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டாலொழிய அவர் சிறைக்குச் செல்லவேண்டியதில்லை.
ஆனால், தங்கள் நிலை என்ன என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார்கள் Ravinderம் Sukhwinderம்!