ஐபிசி தமிழின் ஆறாம் நிலம் திரைப்படத்தின் விமர்சனம்
ஈழத்து போர் முடிவுக்கு வந்த பிறகு, சிங்கள இராணுவத்திடம் சரணடைந்து போனவர்களின் எப்படிப்பட்ட இன்னல்களை சந்திக்கின்றனர் என்பதை கூறும் படம் "ஆறாம் நிலம்".
2009ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஈழத்து போர் முடிவுக்கு பிறகு, சிங்கள இராணுவத்திடம் ஆயிரக்கணக்கான மக்கள் சரணடைந்தனர். 
ஆனால், அவர்கள் அதன் பின்னர் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. சிங்கள அரசும் இதுவரை சரணடைந்தவர்களின் உண்மை நிலையை தெரிவிக்கவில்லை.
அதே சமயம் சரணடைந்தவர்கள் பலரை காணாமல் போனவர்கள் என்று அறிவித்துள்ளது. அவர்களின் குடும்பங்கள் எப்படிப்பட்ட சூழலில் வாழ்கின்றனர் என்பதை இப்படம் உணர்த்துகிறது. 
குறிப்பாக, சிங்கள இராணுவத்திடம் சரணடைந்த கணவர் திரும்ப வருவா என்ற நம்பிக்கையில் மனைவி வரை தேடுகிறார். அதேபோல் அப்பா எப்போது வருவார் என்ற கேள்வியுடன் மகளும் காத்திருக்கிறாள்.
இந்த இரண்டு கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த தமிழ் ஈழ மக்களின் வலியை இப்படம் மூலம் நமக்கு புரிய வைத்திருக்கிறார் இயக்குநர் அனந்த ரமணன்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |