ஈழத் தமிழர்களின் வலிகளையும், துயரங்களையும் எடுத்துவரும் ஆறாம் நிலம்
ஈழத் தமிழர்களின் தொடர்ச்சியான வலிகளையும் துயரங்களையும் வெளிப்படுத்தும் முகமாக ஆறாம் நிலம் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஐபிசி தமிழ் தயாரிப்பில் அனந்த ரமணன் இயக்கியிருக்கும் முழு நீள ஈழத் தமிழ் திரைப்படம் ‘ஆறாம் நிலம்’.
கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட நிலம், காணாமல் போனவர்களை தேடும் மனஉளைச்சல் , முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை ஆகியவற்றைச் சுற்றி கதை நகர்கிறது.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் நவயுகா அவரது மகளாக நடித்திருக்கும் தமிழரசி, இருவரும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
கண்ணிவெடிகளை தேடும் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் சிவ சாந்தகுமார் அனைவரையும் சீட்டின் நுனியில் அமர வைத்துவிடுகிறார்.
பின்னனி இசையில் சிந்தக்கா ஜெயக்கொடி கதையோடு பயணம் செய்ய வைத்துள்ளார்.