கேள்வி கேட்டவரின் கழுத்தை எட்டிப்பிடித்த ஆவி... கமெராவில் சிக்கிய திகில் காட்சி
வீடு ஒன்றில் ஆவிகள் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், ஆவிகளை விரட்டச் சென்ற ஒருவரின் கழுத்தை ஆவி ஒன்று நெறித்த காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
பிரபலங்கள் வீட்டில் ஆவிகள் நடமாட்டம் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக, ஒரு குழு பாப் பாடகியான Toyah (63) என்ற பெண்ணின் வீட்டிற்குச் சென்றிருந்தது.
இங்கிலாந்திலுள்ள Worcestershireஇல் வாழும் Toyah, தனது வீட்டில் ஆவிகள் உலாவுவதை சில சந்தர்ப்பங்கள் மூலம் அறிந்துகொண்டார். அவரது வீட்டிற்கு வந்த பல நண்பர்கள், அங்கு ஆவிகள் இருப்பதை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.
ஒரு நாள், Toyahவின் தோழியும் நடிகையுமான Rula Lenska என்பவர் அங்கு வந்திருந்தபோது, திடீரென மயங்கிச் சரிந்துவிட்டிருக்கிறார். மயக்கம் தெளிந்தபோது, அவர் அந்த வீட்டில் தன்னைச் சுற்றிலும் சிறு பிள்ளைகள் நின்றதைக் கண்டதாகவும், அவர்கள் அலறுவதை கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆக, தன் வீட்டில் ஆவிகள் நடமாட்டம் இருப்பதைப் புரிந்துகொண்ட Toyah, அதை உறுதி செய்துகொள்வதற்காக ஆவிகளுடன் தொடர்பு கொள்பவர்களைத் தன் வீட்டுக்கு அழைத்துள்ளார்.
அந்தக் குழுவில் ஒருவரான Barri என்பவர் பதிவு செய்யும் கருவி ஒன்றுடன் அந்த ஆவியுடன் பேச முயல, அவர் பெயரைச் சொல்லிக் கத்திய ஒரு குரல், கீழே உட்கார் என்று கத்தியிருக்கிறது.
திரும்பவும் அவர் அந்த ஆவியைக் கேள்வி கேட்க, சட்டென தனது தொண்டையை யாரோ நெறிப்பது போல் உணர்ந்த Barri மூச்சுவிட முடியாமல் திணறுவதை, வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.
உடனே அங்கிருந்து நகர்ந்த Barri, பிறகு யாரோ தன்னைக் கழுத்தை நெறிப்பது போல் உணர்ந்ததாகவும், தன்னால் மூச்சு விட முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
பிறகு, Barriயின் கழுத்தைப் பிடித்தது, George என்னும் முரட்டு போர் வீரர் ஒருவரின் ஆவி என்பதை உறுதி செய்த அந்தக் குழு, அந்த வீட்டிலிருந்த ஆவிகளைத் துரத்தியுள்ளது.