உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க கோரிய பிரித்தானியாவுக்கு மேக்ரான் எதிர்ப்பு: நேட்டோ அமைப்பில் உருவாகும் பிளவு
நேட்டோ உச்சி மாநாட்டில் காணொளிக்காட்சி வாயிலாக உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸி, தங்கள் விமானங்களில் ஒரு சதவிகிதமும், டாங்குகளில் ஒரு சதவிகிதமும் உக்ரைனுக்கு வழங்கி உதவுமாறு நேட்டோ நாடுகளைக் கேட்டுக்கொண்டார்.
பிரித்தானிய பிரதமரான போரிஸ் ஜான்சன், ஏற்கனவே கூடுதலாக 6,000 ஏவுகணைகளும் 25 மில்லியன் பவுண்டுகளும் உக்ரைனுக்கு வழங்குவதாக வாக்களித்திருந்தார்.
இந்நிலையில், பிரித்தானியா உக்ரைனுக்கு உதவவே விரும்புவதாகவும், ஆனால், அதனால் பின்விளைவுகள் ஏற்படும் என்றும் தற்போது கூறியுள்ள போரிஸ் ஜான்சன், ஆகவே, உக்ரைனுடைய கிழக்கத்திய நண்பர்கள் உக்ரைனுக்கு உதவுமாறும் பரிந்துரைத்தார்.
ஆனால், போரிஸ் ஜான்சனுடைய பரிந்துரைக்கு உடன்படாத பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், உக்ரைனுக்கு விமானங்களோ, டாங்குகளோ வழங்குவது, ரஷ்யாவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் இடையே முரண்பாட்டை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். இதனால் நேட்டோ நாடுகளுக்கிடையிலேயே ஒரு பிளவு ஏற்படும் ஒரு நிலை உருவாகியுள்ளது.
ஏற்கனவே, அணு ஆயுதங்களை தயாராக வைத்திருக்குமாறு தனது படைகளுக்கு உத்தரவிட்ட ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் தலையிட்டால், வரலாற்றில் இதுவரை காணாத அளவுக்கு பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.