மாஸ்க் அணியாத ஊழியர்களால் சுவிஸ் முதியோர் இல்லத்தில் பரிதாபம்
சுவிட்சர்லாந்தின் Obwalden மாநிலத்தில் மாஸ்க் அணிந்து கொள்ளாத ஊழியர்களால் முதியோர் இல்லம் ஒன்றில் ஆறு பேர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 8ம் திகதியில் இருந்தே கொரோனா பாதிப்பு காரணமாக 6 முதியோர்கள் மரணமடைந்துள்ளதாக தொடர்புடைய இல்லம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கொரோனா பரவல் எதிரொலியால் தற்போதைய சூழலில் இல்லம் மூடப்பட்டுள்ளதாகவும் அதன் இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
மரணமடைந்த முதியவர்கள் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளது உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் விரிவான அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என கூறப்படுகிறது.
இந்த விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையிலேயே, ஊழியர்கள் மாஸ்க் அணிந்து கொள்ளாமல் பணியாற்றிய விவகாரம் அம்பலமானது. ஆனால், குறித்த இல்லத்தின் நிர்வாகிகள் ஊழியர்களுக்கு ஆதரவாக வாதிட்டுள்ளதுடன், தேவைப்படும் வேளையில் ஊழியர்கள் மாஸ்க் அணிந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
சுகாதார ஊழியர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து பணியாற்ற வேண்டும் என்றே மாநில நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. மாஸ்க் கட்டயமில்லை என மாநில நிர்வாகம் இதுவரை அறிவிப்பும் வெளியிடவில்லை.
இறந்த 6 முதியவர்களில் இருவர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதும், நால்வர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
தற்போது மாநில நிர்வாகம் தொடர்புடைய முதியோர் இல்லத்தில் நோய் பரவல் தொடர்பில் தீவிர நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.