முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து விஜய் கையெழுத்து போடுவது போல விநாயகர் சிலை
முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து தவெக தலைவர் விஜய் கையெழுத்து போடுவது போல விநாயகர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சையான சம்பவம்
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அண்மையில் மாநில இரண்டாவது மாநாட்டை மதுரையில் பிரம்மாண்டமாக நடத்தி முடித்த நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாநாட்டில் தொண்டர் ஒருவரை விஜயின் பவுன்சர்கள் தூக்கி வீசியதாக புகார் கொடுக்கப்பட்டதன் பேரில் தவெக தலைவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
நேற்று இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட நிலையில் வித்தியாசமான சிலைகளை வைத்து வழிபட்டனர்.
முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து தவெக தலைவர் விஜய் கையெழுத்து போடுவது போல விநாயகர் சிலையை அக்கட்சியின் தொண்டர்கள் வைத்துள்ளனர்.
அதோடு சட்டை பையில் விஜயின் புகைப்படம் வைத்தும், அந்த சிலைக்கு கற்பூரம் ஏற்றி வழிபாடும் நடத்தினர்.
இந்த சம்பவத்திற்கு பொலிஸார் எதிர்ப்பு தெரிவித்ததால் முதலமைச்சர் என்ற பெயர் பலகை நீக்கப்பட்டதாக தெரிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |