மேற்கு பிரான்சை துவம்சம் செய்த புயல்... ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் இன்றி தவிப்பு
பிரான்சை புயல் துவம்சம் செய்ததைத் தொடர்ந்து, மேற்கு பிரான்சில் ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் இன்றி இருளில் தவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
புயலால் மூன்று பேர் காயமடைந்த நிலையில், உயிர்ச்சேதம் இல்லை என்றாலும், குறிப்பிடத்தக்க அளவுக்கு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.
புயலைத் தொடர்ந்து அறுந்து விழுந்த மின் கம்பிகளைத் தொடவேண்டாம் என்றும், தாழ்வாக கிடக்கும் மின் கம்பிகளைக் கண்டால் உடனடியாக மின்சாரம் வழங்கும் நிறுவனமான Enedisக்கு தகவல் கொடுக்குமாறும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் புயல் தொடரும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,
நாடு முழுவதும் விடுக்கப்பட்டிருந்த ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆராய்ச்சி
மையம் இன்று காலை மஞ்சள் எச்சரிக்கையாகக் குறைத்துள்ளது.
Rhône பகுதிக்கு மட்டும் ஆரஞ்சு வெப்ப அலை எச்சரிக்கை தொடரும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.