மேற்கு பிரான்சை துவம்சம் செய்த புயல்... மீண்டும் பிரான்சுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரான்சின் மேற்கு பகுதியை புயல் துவம்சம் செய்த நிலையில், மீண்டும் பிரான்சுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடமேற்கு பிரான்ஸ் நகரமான Beauvaisஇல், மூன்று மாதங்களுக்குப் பெய்யவேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது.
அதனால், சாலைகள் வெள்ளக்காடாகின, விபத்துக்களும் நடந்தன. 18 வயது இளைஞர் ஒருவரைக் காணவில்லை என உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. Reims நகரிலும், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பல நாட்களாக பெருமழை, ஆலங்கட்டி மழை, பலத்த காற்று என நாட்டை துவம்சம் செய்த நிலையில், பல இடங்களில் மின்சேவை பாதிக்கப்பட்டது. பெருமழை, பலத்த காற்று காரணமாக பல இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
? La puissance du courant est inouïe. Des voitures emportées par les eaux à Reims. #inondations #orages pic.twitter.com/Rey8UKg36w
— Damien Canivez (@DCanivez) June 21, 2021
இன்று மாலையும் புயல் தொடரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ல நிலையில், இடியுடன் கூடிய மழையும் பெய்யலாம் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், இதுவரை எந்த பகுதிக்கும் ஆரஞ்சு வானிலை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் கிழக்கு பகுதி மற்றும் பிரிட்டனி பகுதிகளுக்கு மட்டும் எந்த பாதிப்பும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
#MétéoDeDemain
— Météo-France (@meteofrance) June 21, 2021
☀️Soleil près de la #Méditerranée
☁️Ciel chargé parfois pluvieux sur le #NordOuest, vent #NordEst marqué
?Ailleurs temps instable, averses orageuses l’après-midi
?T°C en baisse, 15-16°C près des côtes de la #Manche, 19-28°C ailleurs
?Toulouse (31), @infoclimat pic.twitter.com/hsa460pekK