பாத்திரங்களை மூடிவைத்து சமையுங்கள், ஷவரில் குளியுங்கள்: சுவிஸ் அரசு மக்களுக்கு அறிவுரை
சுவிஸ் அரசு, ஆற்றலை சேமிப்பதற்காக தன் நாட்டு மக்களுக்கு பல அறிவுரைகளை வழங்கியுள்ளது.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை தற்போது ஆற்றல் தட்டுப்பாடு இல்லை.
ஆற்றலை சேமிப்பதற்காக, சுவிஸ் அரசு தன் நாட்டு மக்களுக்கு பல அறிவுரைகளை வழங்கியுள்ளது.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை தற்போது ஆற்றல் தட்டுப்பாடு இல்லை என்றாலும், ஆற்றல் தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்காக ஆற்றலை சேமிப்பது அவசியம் என ஆற்றல் துறை அமைச்சரான Simonetta Sommaruga தெரிவித்துள்ளார்.
சில வாரங்கள் ஆற்றல் தட்டுப்பாடு ஏற்பட்டால் கூட. சுவிஸ் பொருளாதாரத்திற்கு 100 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் வரை இழப்பு ஏற்படக்கூடும் என்கிறார் தொழில் கூட்டமைப்பு ஒன்றின் தலைவரான Monika Rühl என்பவர்.
இந்நிலையில், ஆற்றலை சேமிப்பதற்கு பல ஆலோசனைகளை தன் மக்களுக்கு வழங்கியுள்ளது சுவிஸ் அரசு. அவற்றில் முக்கியமான ஐந்து:
- வீட்டை வெப்பப்படுத்தும்போது 20 டிகிரிக்கு அதிகமாக வெப்பப்படுத்தவேண்டாம். வெப்பநிலையை ஒரு டிகிரி குறைப்பதே 10 சதவிகிதம் ஆற்றலை மிச்சப்படுத்தும்.
- சமைக்கும்போது பாத்திரங்களை மூடி வைத்து சமையுங்கள். திறந்த பாத்திரத்திலிருந்து ஏராளமான ஆற்றல் வெளியேறும்.
- ஒரு அறையிலிருந்து வெளியேறும் முன், அந்த அறையிலுள்ள விளக்குகளை அணைப்பது, ஆற்றல் வீணாவதைத் தடுக்கும்.
- கணினி போன்ற உபகரணங்களை முழுமையாக அணையுங்கள். பயன்படுத்தாத நிலையிலும் அணைக்கப்படாத கணினி போன்ற உபகரணங்களால் ஆற்றல் வீணாகும்.
- குளிக்கும் தொட்டிகளைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, ஷவரில் குளியுங்கள். 37 டிகிரிக்கு குறைவான தண்ணீரை குளிப்பதற்கு பயன்படுத்துங்கள். அது உடலுக்கும் ஏற்றது, ஆற்றலையும் மிச்சப்படுத்தும்.