எரிவாயு தொடர்பில் சுவிஸ் அரசு வெளியிட்டுள்ள எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில், இந்தக் குளிர்காலத்தில் எரிவாயு ரேஷன் முறையில் வழங்கப்படும் சூழல் உருவாகலாம் என பெடரல் அரசு எச்சரித்துள்ளது.
வீடுகளுக்கே அதிக எரிவாயு தேவைப்படுகிறது
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, 40 சதவிகித எரிவாயு வீடுகளை வெப்பப்படுத்துவதற்காகவே செலவிடப்படுகிறது. ஆகவே, வீடுகளுக்கும் கட்டுப்பாடுகள் விதித்தால் மட்டுமே எரிவாயுவை சேமிக்க முடியும் என்பதை அரசு ஒப்புக்கொள்கிறது.
புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்
ஆகவே, வீடுகளை வெப்பப்படுத்துவது தொடர்பில் சட்டங்கள் கொண்டுவரப்படலாம். உதாரணமாக, வீடுகளை இனி 20 டிகிரி வரை மட்டுமே வெப்பப்படுத்தலாம் என கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.
விதிகளை மீறுவோருக்கு அபராதங்கள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதை எப்படி அமுல்படுத்துவது என்பது குறித்து திட்டமிடப்பட்டுவருகிறது.
இந்நிலையில், நேற்று ஊடகவியலாளார்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய சுவிஸ் பொருளாதார அமைச்சரான Guy Parmelin, குளிர்காலத்தில் எவ்வளவு எரிவாயு தேவைப்படும் என்பது வானிலை முதலான விடயங்களைப் பொருத்தது என்றும், ஆனாலும், எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் குறைவாகவே உள்ளதாகவும் தெரிவித்தார்.
image - getty