சிறுநீர் ரத்தச் சிவப்பாக இருந்தால் எதன் அறிகுறிகள் தெரியுமா? உஷாரா இருங்க!
சிறுநீர் என்பது கிட்னியில் உருவாகும். நம் இரத்தத்தில் இருந்து கழிவு பொருட்கள் சிறுநீராக சேரும். இதனை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் பார்த்து கொள்ளுவது நாம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
இருப்பினும் சிலருக்கு சிறுநீர் கழிக்கும்போது அது இரத்த சிவப்பாக மாறுவதுண்டு. அப்படி சிறுநீர் ரத்தச் சிவப்பாக இருந்தால் அதற்கு ஹிமடூரியா என்ற பிரச்சனை இருக்கும். இதனை சாதரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
உடலில் ஏதேனும் ஒரு பாகத்தில் ரத்தப் போக்கு உண்டாகியிருந்தால் இந்த பிரச்சனை உண்டாகும்.
அவ்வாறு உங்கள் சிறு நீரில் ரத்தக் கட்டிகள் அல்லது ரத்த சிவப்பாக இருந்தால் உடலில் ரத்தக் கசிவு அல்லது வேறு ஏதாவது பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். தற்போது அது என்ன அறிகுறியாக இருக்கலாம் என்று பார்ப்போம்.
- அளவுக்கு அதிகமாக புகைப்பிடிப்பவர்களுக்கு சிறு நீரகப் புற்று நோய் வரும் வாய்ப்புகள் அதிகம் அவர்களுக்கு ரத்தக் கட்டிகளாக சிறு நீரில் வெளிப்படும்.
- சிறு நீரகத்தில் கற்கள் இருந்தால் அதன் பாதிப்பாக சிறு நீரில் ரத்தம் வெளிப்படும். அந்த சமயங்களில் காபி, தே நீர் குடிப்பதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் பாதிப்பு இன்னும் அதிகமாகும்.
- சிறு நீரகக் குழாயில் உண்டாகும் கோளாறுகள் ப்ரோஸ்டேட் வீக்கம், ப்ரோஸ்டேட் புற்று நோய், சிறு நீரக செயலிழப்பு, அதிகப்படியான மாத்திரைகள், பயாப்ஸி ஆகியவைகளாலும் சிறு நீரில் ரத்தம் வெளிப்படும்.
- சில வகை ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களான சிக்கில் செல் அனிமியா, ரத்தத் தட்டு நோய்கள் ஆகிய்வற்றாலும் சிறு நீரில் ரத்தம் வெளியேறும்.
-
சிறு நீரில் ரத்தத்தோடு எரிச்சல், அடிவயிறு வலி, காய்ச்சல், வாந்தி, மயக்கம் ஆகியவைகளும் காணப்பட்டால் உடனையாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.