பிரீஸருக்குள் வைக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தையைக் கண்ட சிறுபிள்ளைகள்... பதறவைக்கும் சம்பவத்தை விவரிக்கும் இளம்பெண்
இங்கிலாந்தில், பிரீஸர் ஒன்றிற்குள் பச்சிளங்குழந்தை ஒன்றைக் கண்ட இளம்பெண் ஒருவர், நடந்த சம்பவம் குறித்து விவரித்துள்ளார்.
தெற்கு யார்க்ஷையரில் வாழும் Carol Hirst (28) என்ற இளம்பெண்ணுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அழைத்தது பக்கத்து வீட்டுப் பெண். அலுவலகத்தில் இருக்கும் அவர், தன் வீட்டில் தன் சிறு பிள்ளைகள் இருவரும் இருப்பதாகவும், அவர்கள் பிரீஸருக்குள் குழந்தை ஒன்று இருப்பதைக் கண்டதாகவும் கூறி, பிள்ளைகளுக்கு உதவுமாறு Carolஇடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அதன்படி அந்த வீட்டுக்குச் சென்ற Carol, அங்கு பிரீஸருக்குள் குழந்தை ஒன்று பிளாஸ்டிக் கவர் ஒன்றுக்குள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அவருக்கும் ஒரு குழந்தை இருப்பதால் கடும் அதிர்ச்சிக்குள்ளான Carol அழத்துவங்க, அதற்குள் அவரை தொலைபேசியில் அழைத்த பெண் வீட்டுக்கு வந்துவிட்டிருக்கிறார். அவர் உடனே பொலிசாரை அழைத்தும், அதிர்ச்சியில் அவரால் பேசமுடியாததால், Carol பொலிசாரிடம் விடயத்தைக் கூறியிருக்கிறார்.
பிறகு, அந்த பெண்ணையும் அவரது குழந்தைகளையும் பாதுகாப்பாக தன் வீட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டு, தன் கணவர் Jackson ஐயும் மொபைலில் அழைத்துள்ளார்.
மனைவி கூறுவது உண்மைதானா எனப் பார்ப்பதற்காக Jackson அங்கு விரைய, அந்த வீட்டில் ஒரு பை கிடந்திருக்கிறது. அதை அப்போதுதான் யாரோ பிரீஸரிலிருந்து வெளியே எடுத்து போட்டிருக்கிறார்கள்.
அதை Jackson திறந்து பார்க்க, அந்தப் பைக்குள், தாயின் வயிற்றுக்குள் சுருண்டு படுத்திருப்பது போல் ஒரு குழந்தை உறைந்த நிலையில் இறந்து இருந்திருக்கிறது.
தங்களுக்கும் ஒரு பெண் குழந்தை இருக்க, அதுவும் அப்போது ஞாபகம் வர, அதிர்ச்சியடைந்த Jacksonஆல் அதற்குப் பின் அந்த வீட்டுக்குள் நிற்க முடியாமல், வீட்டை விட்டு வெளியே வந்து பொலிசாருக்காக காத்து நின்றுகொண்டிருந்திருக்கிறார். அவரது மனைவியும், அந்த குழந்தையைக் கண்டதும் வீட்டுக்கு ஓடிச்சென்று தன் குழந்தையைத்தான் பார்த்திருக்கிறார்.
அந்த இறந்த குழந்தையைப் பார்த்த விடயம் தன்னை கடுமையாக பாதித்துள்ளதாக தெரிவிக்கும் Carol, தன் குழந்தையைப் பார்க்கும்போதெல்லாம் அந்த இறந்த குழந்தையே நினைவுக்கு வருவதாகவும், தனக்கு தலை சுற்றுவதாகவும் தெரிவிக்கிறார்.
இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக பொலிசாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 17 மற்றும் 45 வயதுடைய இரண்டு பெண்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். விசாரணை தொடர்கிறது