திடீரென பின்னாலிருந்து யாரோ தாக்கியதுபோல் உணர்ந்த இளம்பெண்: திரும்பியபோது காத்திருந்த அதிர்ச்சி
இங்கிலாந்தில், இளம்பெண் ஒருவர் காலை ஓட்டப்பயிற்சிக்கு சென்றுள்ளார்.
அப்போது, திடீரென பின்னாலிருந்து தன் தலையில் யாரோ தாக்கியது போல உணர்ந்த Hattie Atkinson Smith (27) என்னும் அந்த இளம்பெண், திடுக்கிட்டுத் திரும்பியுள்ளார்.
பார்த்தால், ராட்சத பறவையொன்று அவரது பின்னலைப் பிடித்து விழுங்க முயன்றுகொண்டிருந்திருக்கிறது.
6 அடி நீளமுள்ள அந்த பறவை தன் தலையை விழுங்க முயன்றதைக் கண்ட Hattie, மீண்டும் அதௌ தாக்கலாம் என்று அஞ்சி, அங்கிருந்து ஓட்டம் பிடித்திருக்கிறார்.
பின்னர் வீட்டுக்குச் சென்று, இணையத்தில் அது என்ன பறவை என்று தேட, அது ஒரு Eurasian eagle-owl என்னும் ராட்சத ஆந்தை என்பதை அறிந்துகொண்டுள்ளார் அவர்.
நானே 5 அடி 5 அங்குலம்தான், 6 அடி நீளமான அந்த பறவை என்னைத் தாக்கியதால் பயந்துபோனேன் என்று கூறியுள்ளார் Hattie.