ஏடிஎம் இயந்திரத்தில் பணம் டெபாசிட் செய்ய முயன்று தோற்ற இளம்பெண்... பின்னர் தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் உண்மை
சுவிட்சர்லாந்தில் பாலியல் தொழிலாளி ஒருவர் தனக்கு வாடிக்கையாளர் கொடுத்த பணத்தை ஏடிஎம் இயந்திரத்தில் பணம் டெபாசிட் செய்ய முயன்றுள்ளார்.
ஆனால், இயந்திரம் அந்த பணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
பின்னர் அந்த நோட்டுக்களை கவனித்துப்பார்த்தபோது அவை வித்தியாசமாக இருப்பதைக் கவனித்த அந்த பெண், பொலிசாரிடம் தகவலளித்துள்ளார்.
பொலிசார் Baselஇல் இருக்கும் சம்பந்தப்பட்ட நபரின் வீட்டுக்கு சென்றபோது, அவரது வீட்டில் பிரிண்டர் ஒன்றும் போலி கரன்சி நோட்டுக்களும் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
ஆனால், வேடிக்கை என்னவென்றால், அந்த நோட்டுக்கள் தப்புத்தப்பாக அச்சடிக்கப்பட்டுள்ளன. பார்ப்பதற்கு பிள்ளைகள் விளையாட பயன்படுத்தும் கரன்சி நோட்டுக்களைப் போல அவை இருந்துள்ளன.
ஆனால், அந்த நோட்டுக்களை அச்சடித்த நபரின் சட்டத்தரணியோ, அந்த பெண் கள்ள நோட்டுக்கள் என தெரிந்தேதான் அந்த பணத்தை வாங்கியதாக அவர் மீதே பழியை திருப்பி விட முயன்றுள்ளார்.
அந்த நபரின் செயல் சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாக விமர்சித்த நீதிபதி, மோசடி, கள்ள நோட்டு அச்சடித்தல் மற்றும் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுதல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக அந்த நபரை மூன்று ஆண்டுகளுக்கு வீட்டுச் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.