100 ஆண்டுகள் பழமையான கல்லறைக்குள்ளிருந்து எட்டிப்பார்த்த அந்த பொருள்: ஒரு திகில் வீடியோ
கல்லறை ஒன்றைக் காணச்சென்ற ஒருவர் அந்தக் கல்லறையினுளிருந்து எட்டிப்பார்த்த ஒரு விடயத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அந்த விடயம், நீண்ட தலைமுடி.
Joel Morrison (37) என்பவர், கலிபோர்னியாவின் தலைநகரான Sacramento என்ற இடத்திலுள்ள 100 ஆண்டுகள் பழமையான கல்லறை ஒன்றிற்குச் சென்றிருக்கிறார்.
அப்போது, 1906ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்த கல்லறையிலிருந்து, ஒரு பெண்ணின் தலைமுடி எட்டிப்பார்ப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அது மனிதத் தலைமுடிதானா என்பதைக் கண்டறிவதற்காக, அதிலிருந்து சிறிது மாதிரி சேகரித்து, அதை நீதிமன்ற அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார் Joel.
அந்த கல்லறையின் அருகிலிருந்த மரத்தின் வேர்கள் நீண்டு வளர்ந்து, அந்த கல்லறையை பாதித்திருக்கலாம் என்றும், விலங்குகள் ஏதேனும் அந்த தலைமுடியை வெளியே இழுத்திருக்கலாம் என்றும் Joel கருதுகிறார்.
Horrifying moment ‘human hair’ pokes out of a 100-year-old grave pic.twitter.com/X6Soz7WGlZ
— The Sun (@TheSun) August 28, 2022
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        