தூங்குவதற்கு முன் செய்யக்கூடாத 5 செயல்கள்! மீறினால் ஏற்படும் விளைவுகள்

Health Sleep Mind Before Sleep
By Raju Jul 22, 2021 04:15 AM GMT
Report

தூங்குவதற்கு முன் நாம் செய்யக்கூடாத விஷயங்கள் சில இருக்கின்றன. அந்த செயல்களை நாம் செய்வதால் நமது தூக்கம் பாதிக்கப்படக் கூடும். தூக்கம் பாதிக்கப்படுவதால் வீண் மன உளைச்சல், ஜீரணம் தொடர்பான பிரச்சனைகள் போன்றவை ஏற்பட வாய்ப்பு அதிகம்.

தண்ணீர் குடிப்பது

உறங்குவதற்கு முன்னர் அதிகமாக தண்ணீர் குடிக்க கூடாது. அவ்வாறு குடிக்கும் போது சிறுநீர் கழிக்க அடிக்கடி எழும்ப வேண்டி வரும். இதனால் தூக்கம் பாதிக்கப்படும். சிலர் தூங்கும் ஆர்வத்தில் சிறுநீர் கழிக்காமல் அடக்குவர். அவ்வாறு செய்வதால் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கிறது.

குட்டிதூக்கம் வேண்டாம்

மதியம் உணவிற்கு பிறகு சிறிது நேரம் உறங்கும் பழக்கம் பொதுவாக சிலருக்கு உண்டு, இந்த பழக்கம் இரவில் நல்ல துக்கம் வராமல் தடுக்கும். மதியம் தூங்குவதால் இரவில் சரியான நேரத்திற்கு தூக்கம் வராமல், தூக்கமின்மை போன்ற வியாதிகளால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும் இந்த குட்டி தூக்கம் உங்கள் உடல் எடை அதிகரிக்கவும் காரணமாகிவிடும்.  

செல்போன்

தூங்க செல்லுவதற்கு முந்தைய நிமிடம் வரை கணினி திரையையோ, செல்ஃபோனையோ,பார்த்துக் கொண்டிருக்கும் பழக்கம், இன்றைய மக்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. அனால் அது மிகவும் தவறு. இதனால் கண்கள் சோர்வடைகின்றன. கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. மேலும் செல்ஃபோன் ஸ்க்ரீனில் இருந்து விழும் வெளிச்சம், முகத்தில் படுவதால் முகத்தில் தோல் சுருக்கம் எற்பட வாய்ப்பிருக்கிறது.  

உடற்பயிற்சி

தூங்குவதற்கு முன் உடற்பயிற்சி செய்வது என்பது, ஒரு போதும் செய்யக் கூடாத காரியம். உடற்பயிற்சியில் ஆர்வம் மிக்க சிலர் நேரம் காலம் பார்க்காமல், உடற்பயிற்சியில் ஈடுபடுவர். அவ்வாறு செய்வது மிகவும் தவறு. உறங்குவதற்கு 3 மணி நேரம் முன்னதாக எந்த ஒரு உடற்பயிற்சியையும் செய்து முடிக்க வேண்டும்.  

உறங்கும் முன் காஃபி வேண்டவே வேண்டாம்

உறங்குவதற்கு முன்னதாக காஃபி குடிக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கும். அவ்வாறி செய்வது மிகவும் தவறு. காஃபியில் இருக்கும் கஃபைன் மூளையை சுறுசுறுப்பாக இயங்க செய்யும். நாம் உறங்குவதே மூளை ஓய்வெடுத்துக்கொள்ள தான். அப்படி இருக்கையில் உறங்க செல்லும் முன் நாம் குடிக்கும் காஃபி, நமது தூக்கத்தையும் கெடுத்து மூளையையும் குழப்பிவிடும். 


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US