ரஷ்யாவிற்கு நேரம் நெருங்கிவிட்டது... ஜேர்மன் பொருளாதார அமைச்சர்
ஆற்றலுக்காக ரஷ்யாவை சார்ந்திருப்பதை குறைக்க ஜேர்மனி இன்னமும் செயல்படவேண்டியுள்ளது உண்மைதான், ஆனால், உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீது மேற்கத்திய நாடுகள் விதித்த தடைகள் ரஷ்யா மீது கடுமையான தக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று கூறியுள்ளார் ஜேர்மன் பொருளாதார அமைச்சர்.
ரஷ்யப் பொருளாதாரம் ஆட்டம் கண்டு வருகிறது என்று கூறிய ஜேர்மன் பொருளாதார அமைச்சரான Robert Habeck, ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்வதை பெருமளவில் குறைத்ததன் மூலம், ஜேர்மனி தன் பங்கைச் செவ்வனே செய்துள்ளதாக தெரிவித்தார்.
புடினுக்கு இன்னமும் பணம் கிடைத்து வருவது உண்மைதான், ஆனால், நேரம் ரஷ்யாவுக்கு சாதகமாக இல்லை. அது ரஷ்யாவுக்கு எதிராக உள்ளது என்றார் அவர்.
விதிக்கப்பட்ட தடைகளின் விளைவாக, போரிடுவதற்குத் தேவையான, விமானங்களின் பாதுகாப்பு உபகரணங்கள் போன்ற முக்கியமான உதிரிபாகங்கள் கிடைப்பதில் ரஷ்யாவுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ள Habeck, அதனால், விரைவில் ரஷ்யாவால் போரில் விமானங்களைப் பயன்படுத்தமுடியாத நிலை உருவாகிவிடும் என்றார்.