ஃபெங்கல் புயல் கரையை கடக்கும் நேரம் மாறுகிறது.., வானிலை ஆய்வு மையம் கணிப்பு
ஃபெங்கல் புயல் இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் என்று கூறிய நிலையில் கரையை கடக்கும் நேரம் மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று தீவிர புயலாக மாறியது. இது இன்று காலை 5.30 மணி நிலவரப்படி வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரிக்கு கிழக்கே 150 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 140 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
ஃபெங்கல் புயல் மணிக்கு 7 கி.மீ நகர்ந்த நிலையில் தற்போது 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்நிலையில், ஃபெங்கல் புயல் இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்த நிலையில், தற்போது இன்று மாலை கரையைக் கடக்கலாம் என்று கணித்துள்ளது.
இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல, டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
மழையின் காரணமாக சென்னையில் இருந்து மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |