பிரித்தானியா முழுவதும் 2000 குற்ற மையங்கள்: வெளியான உத்தரவு
பிரித்தானியாவில் கன்சர்வேடிவ் கட்சியினர் 'குற்ற மையங்களில்' ரோந்துப் பணிகளை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளனர்.
சமூக விரோத நடத்தை குற்றங்கள்
கன்சர்வேடிவ் கட்சியினர் திருட்டு, ஆயுதங்கள் வைத்திருத்தல் மற்றும் சமூக விரோத நடத்தை போன்ற குற்றங்கள் அதிகம் நிகழக்கூடிய, பிரித்தானியா முழுவதும் உள்ள 2000 குற்ற மையங்களை அடையாளம் கண்டுள்ளது.
இந்த இடங்கள் நாட்டின் 5 சதவீதப் பகுதியைக் கொண்டிருந்தாலும், 25 சதவீத வன்முறைக் குற்றங்கள் இங்குதான் நிகழ்வதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அந்த பகுதிகளில் 'குற்ற மைய ரோந்துப் பணிகளுக்கு' கன்சர்வேடிவ் கட்சி உத்தரவிட்டுள்ளது.
தரவுகளின்படி, குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் முதல் 5 இடங்களில் நான்கு வெஸ்ட்மின்ஸ்டரில் அமைந்துள்ளன.
அதேபோல் லீட்ஸ், பர்மிங்காம் மற்றும் கார்டிஃப் ஆகிய பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |