கொரோனாவுக்கு இதுவரை மரணமடைந்த பிரித்தானியர்கள்: மொத்த எண்ணிக்கை வெளியானது
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி 313 பேர்கள் மரணமடைந்துள்ள நிலையில், இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் இதுவரை கொரோனா பெருந்தொற்றால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 150,057 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, அமெரிக்கா, இந்தியா, பிரேசில், மெக்சிகோ, ரஷ்யா மற்றும் பெருவைத் தொடர்ந்து, அதிக இறப்பு எண்ணிக்கையை பதிவு செய்த ஏழாவது நாடாக பிரித்தானியா மாறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பிரித்தானியாவில் 146,390 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் நம்பிக்கை அளிக்கும் வகையில் 15,000 எண்ணிக்கை சரிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,434 பேர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை 15,812 என அதிகரித்துள்ளது.
Omicron மாறுபாடு நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 1.2 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளன.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.