முதன்முறையாக நேபாளத்துடன் பிரித்தானியா செய்துள்ள புலம்பெயர்தல் ஒப்பந்தம்: விவரம் செய்திக்குள்...
நேபாள நாட்டுடன் பிரித்தானியா புலம்பெயர்தல் ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது.
பிரித்தானியாவில் பணியாற்றும் நேபாள நாட்டவர்களுக்கு பிரித்தானிய குடிமக்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் வழங்கப்பட உள்ளன.
பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக, வெளிநாடுகளிலிருந்து சுகாதாரப் பணிக்குப் பணியாளர்களை வரவழைக்கும் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.
அதன்படி, ஆயிரக்கணக்கான, கூர்க்காக்கள் என அழைக்கப்படும் முன்னாள் போர்வீரர்கள் பிரித்தானிய மருத்துவமனைகளில் பணி செய்ய இருக்கிறார்கள்.
பிரித்தானிய மருத்துவமனைகளில் 38,000 செவிலியர்களுக்கு தட்டுப்பாடு உள்ளது. 2030வாக்கில் இந்த எண்ணிக்கை 140,000ஆக உயரும் என அஞ்சப்படுகிறது.
Credit: Times Newspapers Ltd
ஆகவே, நேபாளத்திலிருந்து வரும் போர் வீரர்கள் பிரித்தானிய மருத்துவமனைகளில் பணியாற்றும் விதத்தில் பிரித்தானியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.
பிரித்தானிய அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பிரித்தானிய குடிமக்களுக்கு என்னென்ன உரிமைகள் வழங்கப்படுமோ, அதே உரிமைகள் மருத்துவப் பணிக்காக பிரித்தானியாவுக்கு வரும் இந்த நேபாள நாட்டுப் போர் வீரர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.