பிரித்தானிய தடுப்பூசி திட்டத்தின் விளைவு: ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு 31% குறைவு!
பிரித்தானியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படுவதன் விளைவாக ஒரே வாரத்தில் பாதிப்புகளும் இறப்புகளும் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
பிரித்தானியா தற்போது அதன் முன்றாவது தேசிய பூட்டுதலில் உள்ளது. மேலும் அதன் மிகப் பெரிய தடுப்பூசி திட்டத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதன் விளைவாக, ஒரே வாரத்தில் 30.6% கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதாக அரசாங்கம் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை 33,552 என பதிவாகியிருந்த நிலையில், இந்த சனிக்கிழமை 23,275 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், கடந்த சனிக்கிழமையன்று 1,348 உயிரிழப்புகள் பதிவாகியிருந்த நிலையில், இந்த சனிக்கிழமை அதில் 11 சதவீதம் குறைந்து 1,200 இறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளது.
அரசாங்கத்தின் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மத்திலயில், தடுப்பூசி திட்டம் சிறப்பான பலனை அளித்துவருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த ஒரு வார நம்பிக்கைக்குரிய புள்ளிவிவரங்களைத் தொடர்ந்து, பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரித்தானிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்க உடற்பயிற்சி விதிகளை தளர்த்துவது குறித்து ஆலோசித்து வருகிறார்.
