பிரான்சை பிரித்தானியா வைரஸ் மிகப் பெரிய அளவில் தாக்கும்! நாள்தோறும் 2000 பேர் பாதிப்பர்: எச்சரிக்கை தகவல்
பிரான்சில் கடந்த சில நாட்களாக, கொரோனா பரவல் குறைந்துள்ளதால், இது ஒரு நல்ல அறிகுறி என நாட்டின் தலைமையகம் தெரிவித்திருந்த நிலையில், விஞ்ஞான் மற்றும் ஆராய்ச்சி குழு இது தொடர்பாக எச்சரிக்கை ஒன்றை கூறியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பிரான்சில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33 லட்சத்தையும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.
இதற்கிடையில், நாட்டில் கொரோனா பரவல் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 20,000-ல் இருப்பதல்(குறைந்து வருவதால்), இது ஒரு நல்ல அறிகுறி என்று பிரான்சின் சுகாதாரத் தலைமையகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தொற்றியல் நிபுணர்களான Philippe Amouyel, Luc Dauchet ஆகியோரின் ஆய்வின் அடிப்படையில் Professeur Arnaud Fontanet மார்ச் மாதம் முதலாம் திகதி பிரித்தானிய வைரசினால் நாள்தோறும் 2000 மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.
லில் அரசினர் வைத்தியசாலையின் பொதுமக்கள் சுகாதாரத்துறையின் Professeur Philippe Amouyel பிப்ரவரி நடுப்பகுதிக்குள் நாள்தோறும் 2000 கொரோனாத் தொற்று நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பிரித்தானிய வைரசின் தொற்று பெரிய அளவில் பிரான்சைத் தாக்கும் எனவும் எச்சரித்துள்ளார்