உக்ரைன் போர் பத்து ஆண்டுகள் கூட நீடிக்கலாம்... அச்சம் தெரிவித்துள்ள பிரித்தானியா
உக்ரைன் போர் பத்து ஆண்டுகள் கூட நீடிக்கக்கூடும் என்று கூறியுள்ள பிரித்தானிய வெளியுறவுச் செயலர், புடினின் ரஷ்யா, முன்னாள் சோவியத் யூனியனைவிட மோசமானது என்று கூறியிருக்கிறார்.
புடின் இந்தப் போரில் வெற்றி பெற்றால், அது ஐரோப்பாவுக்கு மட்டுமல்ல, முழு உலகுக்கும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறியிருக்கிறார் பிரித்தானிய வெளியுறவுச் செயலரான Liz Truss.
பிரித்தானியாவும் அதன் கூட்டாளிகளும், மேலும் வேகமாக ரஷ்யாவை உக்ரைனை விட்டு வெளியேற்றவேண்டும் என்று கூறியிருக்கிறார் Liz Truss.
இந்தப் போர் நீண்டு கொண்டே செல்லலாம் என்று கூறியுள்ள அவர், நாம் அதற்காக தயாராக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
ரஷ்யாவுடனான எந்த அமைதிப் பேச்சுவார்த்தையிலும், உக்ரைனின் எந்த பாகத்தையும் விட்டுக்கொடுக்க சம்மதிக்கக்கூடாது என்று உறுதிபட வலியுறுத்தியுள்ளார் அவர்.
இதற்கிடையில், உக்ரைனின் சில பகுதிகளை வைத்துக்கொள்ள புடினை அனுமதித்தால், மீண்டும் பிரச்சினைகளை நீட்டிக்கொண்டே சென்று, மால்டோவா மற்றும் ஜார்ஜியா நாடுகள் மீதும் புடின் தாக்குதல்களைத் துவக்கலாம் என அரசு அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.