பிரித்தானிய நாணயத்தின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி... கருத்து தெரிவிக்க மறுத்த பிரதமர் இல்லம்

United Kingdom
By Balamanuvelan Oct 06, 2022 05:53 PM GMT
Report

டொலருக்கு எதிரான பவுண்டின் மதிப்பு, பத்து ஆண்டுகளில் இல்லாத வகையில் சமீபத்தில் வீழ்ச்சியடைந்தது.

இன்று காலை மீண்டும் வரலாறு காணாத அளவுக்கு பவுண்டின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் புதிய சேன்சலர் தனது மினி பட்ஜெட்டை அறிவித்ததைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை, 37 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பவுண்டின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததாக The Sun முதலான பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

மூத்த முதலீடு மற்றும் சந்தை ஆய்வாளரான Susannah Streeter இது குறித்துக் கூறும்போது, சறுக்கு மரத்தில் சறுக்குவது போல, பவுண்டின் மதிப்பு வேகமாக கீழ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது, இன்று காலை மீண்டும் வரலாறு காணாத அளவுக்கு பவுண்டின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. அரசின் பொருளாதார நிர்வாகம் மீதான நம்பிக்கை குறைந்துகொண்டே வருகிறது என்று கூறியுள்ளார்.

எதனால் பவுண்டின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது?

புதிதாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள லிஸ் ட்ரஸ்ஸின் அரசு, மக்களுக்கு ஏராளம் வரிச்சலுகைகள் அறிவித்துள்ளதுடன், வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் ஆற்றல் பிரச்சினையை எதிர்கொள்ள நிதி உதவியும் செய்வதாக அறிவித்துள்ளதால், அதற்காக ஏராளம் பணம் தேவைப்படுகிறது. அதற்காக அரசு பெருந்தொகை கடனாக வாங்கவேண்டியுள்ளது. அந்த கடன் குறித்து முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளார்கள்.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மினி பட்ஜெட்டில் ஏராளம் வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த பெரிய தொகையை அரசு எப்படி ஈடு செய்யும் என்ற அச்சம் உருவாகியுள்ளதே பவுண்டின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதற்கு காரணமாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், பிரதமர் இல்ல செய்தித்தொடர்பாளர், சந்தை அல்லது நாணயம் தொடர்பிலான விடயங்கள் குறித்து நாங்கள் கருத்துத் தெரிவிப்பதில்லை என்று கூறிவிட்டார்.  

பிரித்தானிய நாணயத்தின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி... கருத்து தெரிவிக்க மறுத்த பிரதமர் இல்லம் | The Value Of The British Currency Falls Again

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US