மருத்துவம் குணம் நிறைந்த கீரைகள்
காய்கறிகள், பழங்களை போன்று கீரை வகைகளிலும் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன, வாரத்திற்கு இரண்டு முறையாவது கீரையை உணவில் சேர்த்து வருவது ஆரோக்கியத்தை அள்ளித்தரும்.
முருங்கைக்கீரை
கீரைகளில் அதிக இரும்புச்சத்து கொண்ட கீரை, முருங்கைக் கீரையாகும்.இந்த கீரையில் உணவில் சேர்த்து வந்தால் கண்கள் மற்றும் உடல் பலம் பெறும்.
கரிசிலாங்கண்ணி கீரை
இந்த மருத்துவமிக்க கரிசலாங்கண்ணி கீரை, சளி மற்றும் இருமலை குணமாக்கப்பயன்படுகிறது.
அரைக்கீரை
திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தை இல்லாமல் தவிக்கும் பெண்கள், அரைக்கீரையினை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்து உண்டு வந்தால், கருப்பை பலப்படும்.குழந்தை தங்கும்.
அதேபோல், ஆண்களுக்கு அரைக்கீரை ஆண்மைக்குறைவினைப் போக்கும் தன்மை கொண்டது.
குப்பைக்கீரை
குப்பைக்கீரையில் வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மாவுச்சத்து, புரதச்சத்து போன்றவை உள்ளது.
சிலருக்கு உடலில் வரும் புண்கள் ஆறாமல் பல நாட்கள் இருக்கும். அத்தகைய புண்கள் ஆறுவதற்கு, வைட்டமின் சி நிறைந்துள்ள குப்பைக்கீரையினை உண்டால் விரைவில் சரியாகும். காயம் ஆறும்.
அகத்திக்கீரை
அகத்திக்கீரை உடலுக்கு குளிர்ச்சியைத் தரவல்லவை. அகத்திக்கீரையில் அதிகளவு இரும்புச் சத்து நிறைந்து இருப்பதால், அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
மேலும், இது எளிதில் வயிற்றுப் புண்ணை ஆற்றும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |