மன்னர் சார்லஸை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் அணி
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லஸை சந்தித்துள்ளது.
மன்னர் சார்லஸை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ்
காமன்வெல்த் அமைப்பின் தலைவரான மன்னர் சார்லஸ் பெரில் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.
சூறாவளியால் ஏற்பட்ட மரணம் மற்றும் அழிவைத் தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு மன்னர் தனது மற்றும் அவரது குடும்பத்தினரின் "இதயம் நிறைந்த இரங்கலை" தெரிவித்தார்.
அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான சூறாவளியின் அழிவால் பாதிக்கப்பட்ட கரீபியன் நாடுகளுக்கு £500,000 வரையிலான ஆதரவுப் பொதியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.
மன்னர் சார்லஸின் அழைப்பு குறித்து பேசிய கேப்டன்
இந்நிலையில் மன்னர் சார்லஸின் அழைப்பு குறித்து கேப்டன் கிரேக் பிராத்வைட் பேசிய போது, "அழைக்கப்பட்டதற்கு நாங்கள் பெருமைப்படுகிறோம், மேலும் முழு அணியும் இங்கு இருப்பது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
"பெரில் சூறாவளி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் இந்த கடினமான காலங்களில் மேற்கு இந்தியர்களை பெருமைப்படுத்தவும் அவர்களின் முகத்தில் புன்னகையை ஏற்படுத்தவும் நாங்கள் விரும்புகிறோம்."
மேற்கிந்திய தீவுகள் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை ஜூலை 10 ஆம் திகதி ஆரம்பிக்கும்.
அதற்கு முன்னதாக நாடுகளுக்கு இடையே நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் மற்றும் இந்த மாத இறுதியில் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |