மோடியை புகழ்ந்து பேசிய மனைவி.., அடித்து உதைத்து 3 முறை தலாக் சொன்ன கணவர்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பற்றி மனைவி புகழ்ந்து பேசியதால் தலாக் என்று 3 முறை கணவர் கூறியுள்ளார்.
மோடியை புகழ்ந்த மனைவி
இந்திய மாநிலமான உத்தரப்பிரேதேசம், பரைச் நகரை சேர்ந்த மரியம் என்பவருக்கும், அயோத்தியைச் சேர்ந்த அர்ஷத் என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் 13 -ம் திகதி திருமணம் நடைபெற்றது.
இத்திருமணத்திற்கு பின்னர் மனைவி மரியம் தனது கணவரின் ஊரான அயோத்தியில் வசித்து வந்தார். அப்போது, அயோத்தியில் உள்ள சாலைகள், அழகு மற்றும் வளர்ச்சி ஆகியவை மரியம் -க்கு மிகவும் பிடித்திருந்தது.
இதனால், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் நரேந்திர மோடி ஆகியோரை கணவர் அர்ஷத் முன்னிலையில் புகழ்ந்து பேசினார்.
இதனால் ஆத்திரமடைந்த கணவர், மனைவி மரியம்மை அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். பிறகு, பெரியவர்களின் சமாதானத்திற்கு பிறகு கணவர் வீட்டிற்கு மரியம் வந்தார்.
ஆனால், அப்போதும் கோபத்தில் இருந்த கனவர், மனைவியை அடித்து உதைத்து அவரை பார்த்து 'தலாக், தலாக், தலாக்' என்று மூன்று முறை கூறினார். அதுமட்டுமல்லாமல், கணவரின் குடும்பத்தினர் மரியம்மை கழுத்தை நெரிக்க முயன்றுள்ளனர்.
இதனால், பரைச் நகர பொலிஸில் மரியம் புகார் மூலம் அளித்தார். அவர் கொடுத்த புகாரின்படி கணவர் உள்பட 8 பேர் மீது முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |