சுவிஸில் கணவரை காப்பாற்ற முயன்ற மனைவி.. இறுதியில் துயரத்தில் முடிந்த சம்பவம்
சுவிட்சர்லாந்தில் குடியிருப்பின் ஜன்னலில் இருந்து தவறி விழுந்த கணவரை காப்பாற்றும் முயற்சியில் மனைவியும் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் Emmenbrücke பகுதியிலேயே சனிக்கிழமை பகல் சுமார் 8 மணியளவில் குறித்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.
குடியிருப்பின் ஜன்னலில் வேலை செய்து கொண்டிருந்த 79 வயது நபர் திடீரென்று தடுமாறி அந்த ஜன்னல் வழியாக கீழே சரிந்துள்ளார். இந்த நிலையில், கணவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட 78 வயதான பெண்மணியும் கணவருடன் ஜன்னல் வழியாக கீழே விழுந்துள்ளனர்.
செப்டம்பர் 25ம் திகதி நடந்த இச்சம்பவத்தில் கணவன் மனைவி இருவருமே சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் முன்னெடுத்த முதற்கட்ட விசாரணையில், இது ஒரு விபத்து என கண்டறிந்துள்ளனர்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில் அரசு தரப்பு சட்டத்தரணிகள் விசாரணை முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.