வாந்தி எடுக்க பேருந்தில் இருந்து வெளியே தலை நீட்டிய பெண்! உயிரிழந்த சோகம்
டெல்லியில் 20 வயதுடைய பெண் ஒருவர் வாந்தி எடுக்க பேருந்து ஜன்னலின் வழியே தலையை நீட்டிய போது இரு வாகனங்களுக்கு இடையில் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பேருந்துக்கு வெளியே தலையை நீட்டிய பெண்
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரதாப்கர் என்ற பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய பெண் பாப்லி. இவர் சகோதரி, சகோதரி கணவர் மற்றும் அவர்களின் 3 குழந்தைகளுடன் காஷ்மீர் கேட்டில் இருந்து லூதியானா செல்லும் பேருந்தில் எறியுள்ளார்.
அப்போது, இவருக்கு வாந்தி வந்துள்ளது. உடனே, ஜன்னல் ஓரத்தில் இருந்த பாப்லி வாந்தி எடுப்பதற்காக ஜன்னலின் வெளியே தலையை நீட்டியுள்ளார்.
பெண் உயிரிழப்பு
அப்போது, அந்த பேருந்தின் பின்புறத்தில் வந்த பேருந்து ஓவர்டேக் செய்ய முயன்றுள்ளது. அந்த நேரத்தில், பேருந்து சென்ற பாதை குறுகலாக இருந்ததால் பின்னால் இருந்து வந்த பேருந்து ஒட்டியபடியே வந்துள்ளது.
இதனால், பாப்லி தலையை வெளியே நீட்டியவுடன் பின்னால் வந்த பேருந்தின் மீது வேகமாக தலை மோதியது. இதில், இரு பேருந்துகளுக்கு இடையில் பாப்லியின் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இவர் உயிரிழந்த போது இவரது குடும்பத்தினரும் உடன் இருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |