105 கிலோ எடையை 83 கிலோவாக குறைத்த பெண்! எப்படி குறைத்தார் தெரியுமா?
எடை இழப்பு என்பது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் எடுக்கும் ஒரு நடவடிக்கை ஆகும்.
இன்றைய காலத்தில் ஆண்களை விட பெண்களே அதிக எடையுடன் காணப்படுகின்றார்கள்.
எடை இழப்பில் பல மூலிகை திரவங்கள், பானங்கள் என இருந்தாலும் இது நிரந்த தீர்வினை தராது. இதற்கு நமது வாழ்க்கையில் சில மாற்றங்களை கொண்டு வந்தாலே முடியும்.
அந்தவகையில் ஒரு பெண் தனது உடல் எடை குறைப்பு பயணம் பற்றி பகிர்ந்துள்ளார். அவர் எப்படி உடல் எடையை குறைத்தார்? என்ன மாதிரியான டயட்டுகளை மேற்கொண்டார் என்பதை பார்ப்போம்.
உணவு முறை
காலை உணவு: அவல், ஓட்ஸ்
மதிய உணவு: சப்பாத்தி மற்றும் பச்சை காய்கறிகள்.
இரவு உணவு: இரவில் பெரும்பாலும் புரதச்சத்து நிரம்பிய உணவுகள் - கார்ப்ஸ் நிறைந்த காய்கறிகள்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்: ஐஸ்கிரீம்கள்மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகள்
குறைந்த கலோரி உணவுகள்: புரதச்சத்து நிறைந்த பான் கேக், தயிர் பர்ஃபைட், கீரை சீமை சுரைக்காய் பாஸ்தா, பீட்ரூட் புலாவ்
உடற்பயிற்சி
வாரத்தில் 5-6 நாட்கள், தினசரி 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வழக்கமாக சில HIIT பயிற்சிகளுடன் எடை பயிற்சி செய்வது நல்லது.. இது தவிர, நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்..
வாழ்க்கை முறை மாற்றங்கள்
- ஓரளவுக்கு எடையை குறைத்த பிறகுதான் தொடர்ந்து உடல் எடையை குறைப்பது என்பது கடினம். இந்த தருணத்தில் தான் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
- எடை குறைப்பு முயற்சியில் கவனச்சிதறல் ஏற்படமால் பார்த்து கொள்ளவேண்டும்.
- வாழ்க்கை முறையில் மட்டுமல்ல எண்ணங்களிலும் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும்.
- சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் எழுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.