மதம் மாற்ற முயற்சித்த ஒருவருக்கு தக்க பதிலடி கொடுத்த பெண்மணி!
அண்மையில் மதமாற்றத்திற்கான முயற்சியாக வந்த தொலைபேசி அழைப்பு தொடர்பான குரல்பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தன.
எனினும் குறித்த தொலைபேசி அழைப்பினை மேற்கொண்ட பெண்மணிக்கு இந்து சமயத்தை சேர்ந்த பெண்ணொருவர் தக்க பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பில் இந்துக்கள் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும்.
பௌத்தம், இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என பல் மதத்தவர்கள் ஒன்றாக வாழும் இந்த இலங்கை நாட்டில் தமக்கு விரும்பிய மதத்தை பின்தொடர்வது அவரவர் உரிமை.
இருந்த போதிலும் மதங்களுக்கு இடையில் பிளவினை ஏற்படுத்தும் வகையிலும், ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும் துன்பங்கள் நேரும் சந்தர்ப்பங்களை சாதகமாக பயன்படுத்தி கொண்டு மூளைச்சலவை செய்து, பிற மதங்களை அவதூறாக பேசி மத மாற்றம் செய்ய முயற்சிக்கும் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன.
மதமொன்றின் கொள்கைகளின் பால் ஏற்படும் அன்பினை அறிந்து கொண்டு செயற்படுவதை விடுத்து இவ்வாறான ஏமாற்றுக்காரர்களின் பின்னால் செல்வது முற்றிலும் தவறான விடயமாகும். சைவ சமயத்தவர்களாகிய நாம் நம் அன்னையான சைவ சமயத்தை ஒழுக்கத்துடன் கற்று, நம் சந்ததிக்கு பண்பாடுகளையும் பாரம்பரியங்களையும் சிறப்புடன் புகட்டி ஏனைய மதத்தவர்களுடன் ஒற்றுமையாகவும், உதவும் வகையிலும் வாழ வேண்டியது நம் கடமையாகும்.
இன்பம், துன்பம் என்பது எந்தவொரு மனிதனின் வாழ்விலும் வருவது அவசியமாகும். துன்பம் இன்றி இன்பம் நேரும் போது அதன் முழு சுகத்தையும் நாம் அறிய இயலாது. எனவே எல்லா மதங்களிலும் இன்பம், துன்பம் மற்றும் பிறப்பு, இறப்பு என்பன தொடர்பில் எழுதப்பட்டு தான் இருக்கின்றன.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இந்த நியதிகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்பது தான் இயற்கை. அதனால் தான் இந்து மக்கள் தமது வழிபாடுகளில் இயற்கைக்கு பாரிய இடத்தினை வழங்குகிறார்கள்.
இதனை அறிந்து கொண்டு ஏமாற்றுக்காரர்களின் பேச்சுக்களுக்கு இரையாகாமல் நம் மதத்தையும் கட்டி காத்து ஏனைய மதங்களையும் மதித்து நல்லொழுக்கத்துடன் வாழ்வது இந்து மக்களாகிய ஒவ்வொருவரினதும் கடமையே.