ரஷ்ய இராணுவத்தைத் தாக்க பெட்ரோல் குண்டுகள் தயாரிப்பதற்காக பிரித்தானியாவிலிருந்து உக்ரைன் சென்றுள்ள பெண்
பிரித்தானியர் ஒருவரை காதலித்துக் கரம்பிடித்த உக்ரைன் பெண் ஒருவர், தற்போது தன் நாட்டை ரஷ்யர்களிடமிருந்து காப்பதற்காக பெட்ரோல் குண்டுகள் தயாரித்து வருகிறார்.
இராணுவ வீரரான Michael, உக்ரைனில் முகாமிட்டிருந்தபோது Sabina என்ற பெண்ணை சந்தித்தார். இருவருக்கும் காதல் பற்றிக்கொள்ள, அவரை கரம்பிடித்து இருவருமாக, வேல்ஸிலுள்ள Llanelli என்ற இடத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.
இதற்கிடையில், இருவரும் அமெரிக்கா செல்வதென திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்கான ஆவணங்களைத் தயார் செய்வதற்காக Sabina உக்ரைன் செல்ல, அந்த நேரம் பார்த்து ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துவிட்டது.
ஆகவே, வந்த வேலையை விட்டுவிட்டு, தன் தாய்நாட்டைக் காப்பதற்காக, தன் தாயுடன், தன் பாட்டி வீட்டின் தரைத் தளத்தில் தஞ்சம் புகுந்துள்ளார் அவர்.
Sabinaவின் பாட்டி பெட்ரோல் குண்டுகள் செய்யும் முறையை அறிந்தவர். ஆகவே, பாட்டியும் பேத்தியுமாக, தங்கள் நாட்டை ரஷ்யர்களிடமிருந்து காப்பதற்காக, பெட்ரோல் குண்டுகள் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.
Sabinaவின் கணவரான Michaelம் ஒரு முன்னாள் இராணுவ வீரர் என்பதால், அடுத்த வாரம் அவரும் உக்ரைனுக்குச் செல்ல இருக்கிறார். தன் குடும்பத்தின் பாதுகாப்புதான் தனக்கு முக்கியம் என்று கூறும் Michael, ரஷ்ய வீரர்களை எதிர்த்து தன்னார்வலராக போராட இருப்பதாக தெரிவித்துள்ளார்.