ஜேர்மானியர் உருவாக்கிய உலகின் முதல் பிரம்மாண்ட Gold Cube: அதன் மதிப்பு என்ன தெரியுமா?
ஜேர்மானியர் ஒருவர் உருவாக்கிய Gold Cube ஒன்று நியூயார்க்கில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
185 கிலோகிராம் எடையுள்ள அந்த Gold Cube-யை Niclas Castello என்னும் ஜேர்மானிய கலைஞர் உருவாக்கியுள்ளார்.
24 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட அந்த Cube உருவாக்க, Niclasக்கு 4,500 மணி நேரம் தேவைப்பட்டதாம்.
அதன் மதிப்பு 11.7 மில்லியன் டொலர்களாகும்.
'Castello Coin' என்னும் தனது கிரிப்டோகாயினை அறிமுகம் செய்வதற்காக, மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக Niclas இந்த Gold Cube-யை உருவாக்கியுள்ளார்.
நியூயார்க்கிலுள்ள Central Parkஇல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட நிலையில், ஏராளமானோர் கூடி நின்று அதை பார்வையிட்டனர்.
குற்றம் நிறைந்த நியூயார்க்கில் அந்த Gold Cube யாராவது திருடிச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக ஏராளம் பாதுகாவலர்களும் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆனால், அவ்வளவு எடையுள்ள அதனை எளிதில் திருடிச் செல்வது அவ்வளவு எளிதும் அல்ல என்பது வேறு விடயம்!
இதற்கிடையில், அந்த Gold Cube குறித்து அறிந்த மக்கள், ஏழ்மை நிறைந்த நியூயார்க்கில் அந்த Gold Cube-யை பார்வைக்கு வைப்பதற்கு பதிலாக, அதை உருக்கி, வறுமையும் வீடின்மையும் கொண்ட மக்களுக்கு உதவும் வகையில் பயன்படுத்தவேண்டும் என்று சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துவருகின்றனர்.