கனேடிய பிரதமரை ஹிட்லருடன் ஒப்பிட்ட உலகின் நம்பர் 1 பணக்காரர்: குவியும் விமர்சனங்கள்
உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க், கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவை சர்வாதிகாரி ஹிட்லருடன் ஒப்பிட்டு வெளியிட்ட ட்வீட் கடும் விமர்சனத்துள்ளாகியுள்ளது.
கனடாவில், ட்ரக் சாரதிகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும் என்ற விதி அறிமுகம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே ட்ரக் சாரதிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் விடயம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், அவர்களைக் கட்டுப்படுத்த ட்ரூடோ நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அவகையில், போராட்டக்காரர்களின் கிரிப்டோ கணக்குகளை முடக்க பொலிசார் முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கையை கிரிப்டோகரன்சி ஆதரவாளரான எலான் மஸ்க் விமர்சித்துள்ளார். ட்விட்டரில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை ஹிட்லருடன் ஒப்பிட்டு அவர் ட்வீட் ஒன்ற வெளியிட்டுள்ளார்.
ஆனால், அவர் எதிர்பார்க்காத வகையில், அந்த ட்வீட்டுக்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது. அவர் ட்ரூடோவை ஹிட்லருடன் ஒப்பிட்டதால் கோபமடைந்துள்ள பலரும் அவரைத் திட்டி ட்வீட் வெளியிட்டுள்ளார்கள்.
அமெரிக்க யூத கமிட்டி, எலான் மஸ்க் உடனடியாக மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கோரியுள்ளது.
அதே நேரத்தில், எலான் மஸ்கின் ட்வீட்டுக்கு 35,000 லைக்குகள் கிடைத்துள்ளதோடு, அதை 9,000 பேர் ரீட்வீட்டும் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.